இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 32 இலட்சத்து 36 ஆயிரத்து 921 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஒரே நாளில் 338 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதன்படி உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 42 ஆயிரத்து 655 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 34 ஆயிரத்து 848 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 24 இலட்சத்து 09 ஆயிரத்து 345 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 3 இலட்சத்து 84 ஆயிரத்து 921 பேர் வைரஸ் தொற்றுக்கு பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.