Friday, October 22, 2021

இதையும் படிங்க

கரும்பூஞ்சை நோயினால் நாட்டில் முதலாவது மரணம் பதிவு?

அதன்படி, காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. குறித்த நபர் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில்...

‘மெனிக்கே மகே ஹித்தே’ உலகம் முழுவதும் பிரபலமாக இந்தியாவின் ‘றோ’ உளவுப் பிரிவின் சூழ்ச்சி!

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தையும், சிங்கள மக்களையும் வென்றெடுப்பதற்காக இந்தியா மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறதாக சிங்கள தேசியவாதியான பேராசிரியர் நளின் டி சில்வா...

ஓ மணப்பெண்ணே | திரைவிமர்சனம்

நடிகர்ஹரிஷ் கல்யாண்நடிகைபிரியா பவானி சங்கர்இயக்குனர்கார்த்திக் சுந்தர்இசைவிஷால் சந்திரசேகர்ஓளிப்பதிவுகிருஷ்ணன் வசந்த் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் நாயகன் ஹரிஷ்...

இந்தியாவில் 4 நாட்களுக்கான நிலக்கரியே கையிருப்பில் உள்ளதாக அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களில் நான்கு நாட்களுக்கான நிலக்கரியே கையிருப்பில் உள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு கடந்த சில...

உரத்தட்டுப்பாடு பிரச்சினைக்கு நிவாரணம் கோரி நாடாளுமன்றில் குழப்பம்!

உரத்தட்டுப்பாடு பிரச்சினைக்கு நிவாரணம் கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது நாடாளுமன்றில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமா? | ஆய்வுக் குழுவின் முடிவு

மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்...

ஆசிரியர்

தமிழகத்தில் நிரந்தர ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்திட தொண்டர்கள் அடித்தளம் அமைக்க வேண்டும்!

சென்னை: தமிழகத்தில் இனி நிரந்தர ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்திட தொண்டர்கள் அடித்தளத்தை உருவாக்க வேண்டும் என்றும், உள்ளாட்சி தேர்தலில் முழு வெற்றியை பெற கட்சியினர் தீவிரமாக உழைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக முப்பெரும் விழாவில் பேசினார். பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி, அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி, திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17ம் தேதி ஆகிய இந்த மூன்று முக்கிய நிகழ்வுகளையும் இணைத்து திமுக முப்பெரும் விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா நேற்று சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், எம்பிக்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிற்றரசு வரவேற்புரையாற்றினார்.

விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றி பேசியதாவது: ‘பகுத்தறிவுப் பகலவன்’தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17. தந்தை பெரியாரால் ஏற்றி வைக்கப்பட்ட ‘இனமானச் சுடரொளி’ பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று. தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கிக் கொண்டிருக்கும் திமுக தோன்றிய நாள் செப்டம்பர் 17. இந்த மூன்று விழாக்களையும் இணைத்து செப்டம்பர் 15ம் நாளில் ‘முப்பெரும் விழா’ நடத்தப்படுகிறது.
கலைஞரால் ‘மாணிக்கம்’என்று புகழப்பெற்ற மதிவாணன், தந்தைப் பெரியார் பெயரிலான விருதைப் பெற்றிருக்கிறார்.

பேரறிஞர் அண்ணா பெயரிலான விருதை தேனி மூக்கையா பெற்றுள்ளார். கலைஞர் பெயரிலான விருதை கும்மிடிப்பூண்டி வேணு பெற்றுள்ளார். பாவேந்தர் பெயரிலான விருதை வழக்கறிஞரான வாசுகி ரமணன் பெறுகிறார். பேராசிரியர் பெயரிலான விருதை முபாரக் பெறுகிறார். இந்த பெருமைக்குரியவர்கள், பெருமைக்குரிய விருதுகளைப் பெற்றுள்ளனர்.
‘முரசொலி சில நினைவலைகள்’என்ற தொடர் கட்டுரை 100 நாட்களாக முரசொலியில் வெளியானது. நமது அண்ணன் முரசொலி செல்வம், ‘எங்களை உருவாக்கியவர்’என்று இங்கே பலரும் சொன்னார்கள்.

என்னை உருவாக்கிய காரணகர்த்தாக்களுள் அவரும் ஒருவர். என் மீது அக்கறை எடுத்துக் கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். இப்போதும் வழங்கிக் கொண்டிருக்கிறார். நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் நம்முடைய தலைவர் இல்லை என்ற குறையை எனக்கு இன்றைக்குப் போக்கிக் கொண்டு இருப்பவர் முரசொலி செல்வம்.  முரசொலியின் தொடக்க காலத்தில் நானும் எனது சகோதரர்களும் எப்படியெல்லாம் பணியாற்றினோம் என்பதை அண்ணன் செல்வம் சொல்லி இருக்கிறார்கள். முரசொலி என்பது தாளாக மட்டும் இல்லாமல் வாளாகவும் இன்றைக்கு நம்முடைய கைகளில் இருக்கிறது.

அவரால் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகம் அதற்குச் சாட்சியாக இருக்கிறது.  திமுகவினருக்கு இது பொக்கிஷம்.  ஜெயலலிதாவின் ஆட்சியில் 1992ம் ஆண்டு முரசொலி செல்வம் சட்டமன்றத்தில் கூண்டில் ஏற்றப்பட்டார். சட்டமன்ற வரலாற்றில் முன்னும் பின்னும் எடுத்துக்காட்டு இல்லை என்கிற அளவுக்கு பேரவைக்குள் கூண்டு வைக்கப்பட்டு அதில் செல்வம் ஏற்றப்பட்டார். ‘கூண்டு கண்டேன், குதூகலம் கொண்டேன்’ என்று ‘முரசொலி’யில் கலைஞர் எழுதினார். கலைஞர் பாணியில் சொல்ல வேண்டுமானால், ‘இந்த புத்தகம் கண்டேன், குதூகலம் கொண்டேன்’ என்றுதான் நான் சொல்ல வேண்டும்.

‘உங்களுக்காக உழைக்கக் காத்திருக்கிறோம், எங்களுக்கு வாக்களியுங்கள்’ என்று நாட்டு மக்களிடம் நாம் வாக்குகளைக் கேட்டோம். இந்த நான்கு மாத காலத்தில் திமுக அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள் உங்களுக்குத் தெரியும். இந்த நான்கு மாதகாலத்தில் நாட்டு மக்களிடையே ‘நல்லவர்கள் நாம்’ என்று பெயர் எடுத்துள்ளோம். இந்த நான்கு மாதகாலத்தில் ‘வல்லவர்கள் நாம்’ என்று பெயர் எடுத்துள்ளோம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள் இவர்கள் என்று பெயர் எடுத்துள்ளோம். திமுக ஆட்சி சொன்னதைச் செய்யும்’ என்ற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறோம்.

நான்கு மாதகாலத்தில் இத்தனைத் திட்டங்களை நிறைவேற்ற முடிகிறது என்றால் அடுத்து என்னென்ன திட்டங்கள் வரவிருக்கிறது என்று எண்ணிப் பாருங்கள். ஒவ்வொரு மாதம் முடியும்போதும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு துறையிலும் விடியல் பிறக்கப் போகிறது. கொரோனா பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்றியது தான் மாபெரும் சாதனையாகும். இப்படியாக மக்களுக்கு கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் நாம் நிறைவேற்றித் தருவோம். கடந்த ஒருமாதமாக நடந்த மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கெடுத்துப் பேசிய அமைச்சர்கள், தங்கள் துறை சார்பில் ஏராளமான அறிவிப்புகளைச் செய்துள்ளார்கள்.

அந்த பணிகள் எவ்வாறு நடக்கிறது என்று மாதம் இருமுறை ஒவ்வொரு துறையையும் நான் ஆய்வு செய்து மக்களிடத்தில் சேர்க்கின்ற கடமைதான் என்னுடைய கடமை. இதனை இங்கு சொல்வதற்கு காரணம், இன்னும் நமக்கு ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன. விரைவில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. அதன்பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறோம். இவைகளில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். கோட்டையில் நாம் கையெழுத்துப் போடும் திட்டங்கள், குக்கிராமங்கள் வரை போக வேண்டுமானால் உள்ளாட்சி அமைப்புகள் முழுமையாக நம் வசம் இருக்க வேண்டும்.

வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லையே ஏங்கும்படியாகும் நம் பணி இருந்திட வேண்டும். இனி, தமிழ்நாட்டில் நிரந்தரமாக நம்முடைய ஆட்சிதான் நடந்திட வேண்டும். அதற்குத் தேவையான அடித்தளத்தை திமுக தொண்டர்கள் உருவாக்கியாக வேண்டும். ‘பெரியாரின் பிள்ளைகள் நாம், பேரறிஞரின் தம்பிகள் நாம், கலைஞரின் உடன்பிறப்புகள் நாம்’ என்பதைக் கட்சியிலும் ஆட்சியிலும் நிரூபித்து வண்ணமிகு தமிழ்நாட்டை உருவாக்க இந்த முப்பெரும் விழாவில் உறுதியேற்போம் என்றார்.

விழாவில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட திமுக முன்னணியினர் பங்கேற்றனர். இந்த முப்பெரும் விழாவை மாவட்டங்களில்-ஒன்றியங்களில் இருந்து காணொலி வாயிலாக காணவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதையும் படிங்க

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 759 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக்...

டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை!

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் புதிய வகையான டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர...

இலங்கையில் ஒரு கிலோ கீரி சம்பா அரிசியை 125 ரூபாய்க்கு சந்தைப்படுத்த நடவடிக்கை!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 125 ரூபாய் என்ற ரீதியில் சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி,...

காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம்!

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மண்டல காவல்துறை...

யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் காலமானார்!

யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.கேதீஸ்வரன் காலமானார். கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் குணமாகி வீடு...

இமாச்சலப் பிரதேசத்தில் பனியில் சிக்கிய ஐவர் உயிரிழப்பு!

இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையின் துணை ஆணையர் அபித் ஹுசைன் சாதிக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், உத்தரகாண்டில் வெள்ளத்தில் சிக்கிய இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கரும்பூஞ்சை நோயினால் நாட்டில் முதலாவது மரணம் பதிவு?

அதன்படி, காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. குறித்த நபர் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில்...

நயன்தாரா படம் மூலம் நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்!

பிரபல நடன இயக்குனரான கலா மாஸ்டர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் நடனம் அமைத்துள்ளார். இதுதவிர சின்னத்திரையிலும் மானாட...

திடீரென ஆன்மீக சுற்றுலா சென்ற சமந்தா…. அதுவும் யார் கூட போயிருக்காங்க தெரியுமா?

கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நடிகை சமந்தா பற்றி ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்தார், கருக்கலைப்பு செய்தார், இன்னொருவருடன் தொடர்பு இருந்தது என்றெல்லாம்...

மேலும் பதிவுகள்

21ஆம் திகதி பாடசாலைக்குச் செல்வோம் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!

அவ்வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாடசாலைப் பிள்ளைகள் பள்ளிக் கல்வியை பல மாதங்களாக இழந்து நிற்கின்றனர். யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து...

‘மெட்டி ஒலி’ சீரியல் பிரபலம் உமா மகேஸ்வரி காலமானார்!

‘மெட்டி ஒலி’ தொடரில் விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை உமா மகேஸ்வரி. கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது...

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஏஞ்சலிக் கெர்பர்- டிமிட்ரோவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின், ஏஞ்சலிக் கெர்பர் மற்றும் கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில்,...

வெப் தொடரில் அறிமுகமாகும் திரிஷா!

கொரோனா சினிமா துறையை முடக்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு மவுசு கூடி உள்ளது. இந்த தொடர்கள் திரைப்படங்களைப்போல் காதல், ஆக்‌ஷன், மர்மம், பிரம்மாண்டம் என்று ரசிகர்களை...

நிருபமா ராஜபக்ஷவின் சொத்துவிபரங்களை வெளியிடுமாறு ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் கோரிக்கை!

பண்டேரா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் சொத்து விபரங்களை வெளிப்படுத்துமாறு ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு 3 தகவல் அறியும் உரிமை விண்ணப்பப்படிவங்களைத் தாக்கல் செய்துள்ளது.

வடக்கு மாகாண புதிய ஆளுநர் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம்!

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா நேற்று (சனிக்கிழமை) மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்தார். வடக்கு மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா...

பிந்திய செய்திகள்

கருவில் உள்ள சிசுவின் உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

கருவுவில் இருக்கும் போது குழந்தைக்குக் கிடைக்கும் சத்துக்கள்தான் அதன் ஒட்டுமொத்த வாழ்க்கையே தீர்மானிக்கப் போகிறது. பத்து மாதம் கருவில் வளர்ந்து வெளியே வரும்...

பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்

பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பாக பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது தொழிலுக்கான உற்பத்தி பொருளை...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 759 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக்...

டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை!

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் புதிய வகையான டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர...

இலங்கையில் ஒரு கிலோ கீரி சம்பா அரிசியை 125 ரூபாய்க்கு சந்தைப்படுத்த நடவடிக்கை!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 125 ரூபாய் என்ற ரீதியில் சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி,...

காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம்!

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மண்டல காவல்துறை...

துயர் பகிர்வு