இந்தியாவில் சைடஸ் கடிலா கொரோனா தடுப்பு மருந்து விரைவில் அறிமுகம்!

இந்தியாவில் தடுப்பூசி இயக்கத்தில் சைடஸ் கடிலா கொரோனா தடுப்பு மருந்து விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நலவாழ்வுத்துறைச் செயலர் ராஜேஷ் பூசண் தெரிவித்துள்ளார்.

சைடஸ் கடிலா நிறுவனம் டிஎன்ஏ அடிப்படையில் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை அவசர தேவைக்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த மருந்து ஊசி இல்லாமல் பயன்படுத்தப்படும்.

முதன்முறை மருந்தை பெற்றுக்கொண்டப் பின்னர் 28 ஆவது நாளில் இரண்டாவது தவணையை பெற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் 56 ஆவது நாளில் மூன்றாவது தவணையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

குறித்த மருந்து நாளைய தினத்தில் இருந்து பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்