இந்தியாவில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு!

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று(செவ்வாய்கிழமை) உருவாக வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன்காரணமாக தமிழ்நாட்டில் எதிர்வரும் 3ஆம் திகதி வரை மழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நாளை மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்வரும் 3ஆம் திகதி வரை தமிழ்நாட்டில் மழை தொடரும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்ற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதனை தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்