டெல்லியில் 12 பேர் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளார்களா?

அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் அவர்களின் இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, சீனா, மொரீஷியஸ். ஜிம்பாப்வே நியுசிலாந்து சிங்கப்பூர் போன்ற பாதிப்பு மிக்க நாடுகளில் இருந்து டெல்லி வந்த இந்த 12 பேரும் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. நான்கு பேருக்கு லேசான அறிகுறிகள் காணப்பட்டன.

ஒமிக்ரோன் பாதிப்பு குறித்து முடிவு தெரிய சில நாட்களாகும் என்பதால் அவர்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்