செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியா -தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக எச்சரிக்கை!

இந்தியா -தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக எச்சரிக்கை!

1 minutes read

கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் உள்ள ஒருசில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இரண்டிற்கும் அதிகமான மாவட்டங்களில் கொரோனா அதிகரிக்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் கொரோனா நிலைமை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் பேசுகையில், “நாட்டில் உள்ள 90 மாவட்டங்களில் இருந்து 80 சதவீத பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

அதில் கேரளம், தமிழகம் உட்பட சில மாநிலங்களில் இரண்டிற்கும் அதிகமான மாவட்டங்களில் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

இருப்பினும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகின்றது. கடந்த வாரம் புதிதாக பதிவாகும் பாதிப்பு 8 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் குணமடைவோர் விகிதம் 97.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையை தற்போது வரை எதிர்கொண்டு வருகிறோம். பிரித்தானியா, ரஷ்யா போன்ற நாடுகளைப் போல் மீண்டும் கொரோனா பரவாமல் இருக்க தொடர்சியாக நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.