செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஐக் கடந்தது!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஐக் கடந்தது!

0 minutes read

இந்தியாவில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், குறித்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் இத்தாலியில் இருந்து சண்டிகர் வந்த இளைஞர் ஒருவருக்கும், அயர்லாந்தில் இருந்து வருகை தந்த ஒருவருக்கும் ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநிலங்களின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல் மகராஷ்டிரா , கேரளா , கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் தலா ஒவ்வொருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 3 ஆயிரத்து 632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 46 இலட்சத்து 94 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 3 கோடியே 41 இலட்சத்து 22 ஆயிரத்து 795 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம் 95 ஆயிரத்து 913 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.