
தமிழ்நாடு – கேரளா எல்லையில் பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க கடுமையான தடுப்பு நடவடிக்கை தீவிரமாக்கபட்டுள்ளது.
கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அது தமிழ் நாட்டில் பரவாமல் இருக்க கேரளாவிலிருந்து கோழி மற்றும் அது சார்ந்த பொருட்களை தமிழ் நாட்டிற்குள் கொண்டு வர தடை விதித்து நீலகிரி கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து தமிழக எல்லைகளில் கால்நடை மருத்துவர் அடங்கிய குழுவினர், வனதுறை, வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பறவை காய்ச்சல் வாத்து, வான்கோழி , வன பறவைகள் போன்றவைகளை மட்டும் அல்லாமல் மனிதர்களையும் தாக்கும் என்பதால் இந்த கண்காணிப்பு எல்லையோரத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கடுமையாக்க பட்டுள்ளது.
வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து A.N.கெளடர்.