பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் புனித யாத்திரையாக வியாழனன்று இந்தியாவின் திருப்பதியை சென்றடைந்துள்ளார்.

திருப்பதி விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, மாநில துணை முதல்வர் கே.நாராயணசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் எம்.ஹரிநாராயணா தலைமையில் சித்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் மஹந்த ராஜபக்ஷ தனது குடும்ப உறுப்பினர்களுடன் வெள்ளிக்கிழமை காலை திருப்பதி திருமலை கோவிலில் வழிபாடு நடத்துவார்.
பிரதமரின் 2 நாள் விஜயத்துக்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.