செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா வன்னியர் இடஒதுக்கீடு வழக்கு திட்டமிட்டபடி விசாரணை!

வன்னியர் இடஒதுக்கீடு வழக்கு திட்டமிட்டபடி விசாரணை!

1 minutes read

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது உள்ஒதுக்கீடு அரசியல் அமைப்பிற்கு எதிரானது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பா.ம.க. சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், இந்த விவகாரத்தில் திட்டமிட்டபடி பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.  இடைக்கால தடைவிதிக்க மறுப்பு தெரிவித்தது. ஏற்கனவே பணியில் அமர்த்தப்பட்டவர்களை நீக்கக்கூடாது. பிப்ரவரி 15ந்தேதி மாணவர்கள் சேர்க்கை நடத்தக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தது.


மேலும், இருதரப்பு வாதங்களை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்திருந்தது. அதன்படி 3 ஆயிரம் பக்கம் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும், சில ஆவணங்களை தாக்கல் செய்ய திங்கட்கிழமை வரை அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.


ஆனால், எக்காரணம் கொண்டும் விசாரணையை தள்ளி வைக்க அவசாகம் கோரக்கூடாது.  வருகிற 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விசாரணை திட்டமிட்டபடி நடைபெறும் என கோர்ட்டு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.