இலங்கை கடற்படையால் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த 47 தமிழக மீனவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
இந்த விடயம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.
குறித்த கடித்தில், இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 47 பேரை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
விடுவிக்கப்பட்ட மீனவர்கள் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்கள் அனைவரையும் மீன்வளத் துறை அதிகாரிகள் வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.