September 22, 2023 2:22 am

பெகாசஸ் உளவு விவகாரம் மீண்டும் விசாரணைக்கு வருகிறது!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பெகாசஸ் உளவு விவகாரம் நாளைய (புதன்கிழமை) தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கினை விசாரணை செய்ய உச்சநீதிமன்ற நீதிபதியை கொண்டு சிறப்பு விசாரணை குழு அமைக்கக்கோரி ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரணை செய்து வருகின்ற நிலையில், நாளைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளன.

பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், நீதிபதிகள் வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள்,  தேர்தல் ஆணையர்கள் என நாட்டின் முக்கிய பொறுப்புகளில் இருக்கக்கூடியவர்களின் செல்பேசிகள் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலமாக உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்