இந்தியர்களை மீட்பதற்காக முதல் விமானம் உக்ரைன் புறப்பட்டது!

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்பதற்கான முதல் விமானம் இந்தியாவில் இருந்து புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக  ஏர் இந்தியா சார்பில் மூன்று விமானங்களை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

200 இருக்கைகளை கொண்ட முதல் விமானம் இன்று நள்ளிரவில் இந்தியா வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து எதிர்வரும் 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் அடுத்தடுத்த விமானங்களை ஏர் இந்தியா நிர்வாகம் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்