உத்தரகாண்ட் பேருந்து : சம்பவ இடத்திலேயே 14 பேர் உயிரிழப்பு!

தனக்பூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

சுகிதாங் – தண்டமினார் சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள அதேநேரம் பேருந்தின் சாரதி உள்ளிட்ட இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்