சீன எல்லைக்கு அருகாமையில் யுத்தப் பயிற்சி

எதிர்வரும் ஒக்டோபர் 18 முதல் 31 வரையில் உத்தர்காண்டில் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு யுத்தப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன.

‘யுத்தபியாஸ்’ என அழைக்கப்படும் இந்த யுத்தப் பயிற்சி சீன எல்லைக்கு அருகாமையில் அவுலி என்ற பகுதியில் நடைபெறும் என்றும் மலைப்பாங்கான பகுதியில் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்வது தொடர்பாக இப் பயிற்சி அமைவும் என்றும் புதுடில்லி தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

இது இந்தியா – அமெரிக்க படைகள் கூட்டாக ஈடுபடும் 18வது போர்ப் பயிற்சியாகும்.

இவ்விரு நாடுகளும் கடைசியாக அலஸ்காவில் தமது பயிற்சியை நடத்தியிருந்தன. கடும் பனிக்காலத்தில் யுத்தம் செய்வது தொடர்பானதாக இப்பயிற்சி அமைந்திருந்தது.

ஆசிரியர்