செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் கொரோனாவை அலட்சியப்படுத்தும் இங்கிலாந்து மக்கள்……

கொரோனாவை அலட்சியப்படுத்தும் இங்கிலாந்து மக்கள்……

0 minutes read

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பொதுமக்கள் உயிரிழந்து வரும் நிலையில் மற்றொருபுறம் பொதுமக்களில் ஒரு சாரார் எந்தப் பதற்றமும் இன்றி வழக்கம்போல பூங்காக்களிலும், பொதுவெளியிலும் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிந்து வருகின்றனர்.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பினால் 3 ஆயிரத்து 700க்கும் கூடுதலானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு பிரதமர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் அதனை பொருட்படுத்தாமல் லண்டனில் உள்ள ரீஜன்ட் பூங்கா பகுதில் ஏராளமான மக்கள் உடற்பயிற்சி செய்தும், கூட்டம் கூட்டமாக  பேசிக் கொண்டும் சுற்றி வருகின்றனர்.

மேலும் ஒலிம்பிக் பூங்கா, பிரிங்டான் உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் அதிகமாகச் சுற்றி வருகின்றனர். மக்களின் இதுபோன்ற பொறுப்பற்ற செயலால் கொரோனா பரவும் வேகம் அதிகப்படும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.