காங்கோசன்துறை மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் கணிசமானளவு எண்ணெயினைத் தாங்கி வைத்திருந்த எண்ணெய்த் தாங்கி வெடித்ததனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 1 மணியளவில் தீப் பற்ற ஆரம்பித்ததாக ஸ்ரீ லங்கா கடற்படையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். கட்டுக்கடங்காமல் எரிந்துவரும் குறித்த கப்பலி தீயினை அணைக்கும் முயற்சியில் கடற்படையினரின் தீ அணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
