
இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் சீனா மெர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் கம்பெனி லிமிட்டெட் ஆகியவற்றிற்கு இடையில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி கையொப்பமிடப்பட்ட உடன்படிக்கையின் படியே சுமார் 584 மில்லியன் அமெரிக்க டொலர்களை தமது முதலீட்டின் இறுதி கட்டமாக பெற்றுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலீடு செய்வதற்காக 1.12 பில்லியன் அமெரிக்க டொலர்களை துறைமுக அதிகாரசபைக்கு செலுத்துவதாக குறித்த சீன நிறுவனம் ஒப்புக்கொண்டிருந்து.
இதன் முதற்கட்ட பணமாக இலங்கை அரசாங்கத்திற்கு 292.1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கடந்த 2017 டிசம்பரில் கிடைக்கப் பெற்றதுடன் மீதித்தொகை எதிர்வரும் 06 மாதங்களுக்குள் இரண்டு தவணைகளில் செலுத்தப்படுவதாக ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.
அதன்படிப்படையில் இரண்டாவது கட்டமாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி 97.365 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது.
அதனை தொடர்ந்து இறுதி தவணை கட்டணமான 584 மில்லியன் ரூபாவை குறித்த நிறுவனம் இன்று துறைமுக அதிகாரசபைக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.