முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ அவர்கள் அறிவுறுத்தல் விடுத்தார் அமெரிக்க குடியுரிமையை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அப்போதுதான் ஜனாதிபதி தேர்தலில் நீக்கமுடியும் என அதட்கு அமைய முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையானதன் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வீரக்கெட்டிய டீ. ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியக நிர்மாணப் பணிகளின் போது இடம்பெற்றாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது சுமார் மூன்று மணித்தியாலங்கள் அவர் காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் பதிவு செய்திருந்தார்.
அதன் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,
அமெரிக்க குடியுரிமையை விலக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைக்கு தாம் இதுவரை செல்லவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஏனெனில், ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலையாகுமாறு மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுக்கவில்லை.
