தூதரக பிறப்பு சான்றிதழ் மற்றும் குடியுரிமை சான்றிதழ் பெறுவதற்குமான நடமாடும் சேவை இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.
”ஒப்பர் சிலோன்” அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் ஆகியன ஒப்பர் சிலோன் அமைப்பின் உதவியுடன் குறித்த சேவையை முன்னெடுத்திருந்தனர்.
நாடு திரும்பிய இலங்கை பிரஜைகளின் பிறப்பு சான்றிதழ் மற்றும் குடியுரிமை சான்றிதழ் ஆகியவற்றை பெற்று கொடுக்கும் விசேடட நிகழ்வு இதுவாகும்.
இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மக்களின் பிறப்பு மற்றும் குடியுரிமை சான்றிதழ்களை பெற்று கொடுப்பதற்காக குறித்த நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த நடமாடும் சேவையில் வடக்கு கிழக்கில் இருந்து வருகை தந்திருந்த பெரும்பாலான மக்கள் சேவையை பெற்றுக்கொண்டனர்.
இந்நடமாடும் சேவையில்,ஒப்பர் சிலோன் அமைப்பின் பொருளாளரும் ஸ்தாபகருமான சந்திரகாசன், அவ்வமைப்பின் தலைவி சூரியகுமாரி, அமைப்பின் செயலாளர் நடராஜா, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் நாகந்தல, பதிவாளர் திணைக்கள் அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

