பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு தொகை கொக்கைன் வில்லைகளை விழுங்கிய நிலையில் இன்று (01) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
24 வயதுடைய பிரேசில் நாட்டவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் பிரேசிலில் இருந்து டோஹாவிற்கு வந்து, அங்கிருந்து இன்று காலை 10.30 மணியளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமானே QR 664 என்ற விமானத்தில் சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.
குறித்த நபர் ஒரு கோடியே 50 இலட்சம் பெறுமதியான 100 கொக்கைன் வில்லைகளை விழுங்கியுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பிரிவினரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
