செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழீழ விடுதலை புலிகளின் கை ஓங்க வேண்டும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்!

தமிழீழ விடுதலை புலிகளின் கை ஓங்க வேண்டும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்!

1 minutes read

 

தற்போது வடக்கில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கொலை, கொள்ளை,
கற்பலிப்பு, சிறுவர் துஸ்பிரயோகம், வாள்வெட்டு அனைத்தையும் நிறுத்தவேண்டும்மென்றால் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும் என்பதே எமது முக்கிய நோக்கம் என சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (02) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஜனாதிபதியை தலையால் நடந்து ஜனாதிபதி ஆக்கினோம். ஆனால் அவர் இன்று கட்சியை வளர்க்கின்றாரே அன்றி எமது மக்களை காப்பற்றுகின்றார் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

6 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகளின் காலத்தில் நாம் எவ்வாறு வாழ்ந்தோம் என்பதை இப்போது ஒவ்வொரு வரும் உணர்கின்றோம்.

நாங்கள் உயிருடன் வாழ வேண்டும் என்றால், நாங்கள் நிம்மதியாக வீதியில் நடக்க வேண்டுமாக இருந்தால், எங்களுடைய பிள்ளைகள் பாடசாலை சென்று மீண்டும் வீடு திரும்ப வேண்டுமால் வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலை புலிகளின் கை ஓங்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.