செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இராணுவ சிப்பாய்னால் பாடசாலை மாணவி கூச்சல்!

இராணுவ சிப்பாய்னால் பாடசாலை மாணவி கூச்சல்!

1 minutes read

இராணுவ முகாமில் கடமைபுரியும் ஹம்பாந்தோட்டையைச் ​சேர்ந்த 29 வயதான இராணுவ சிப்பாய் ஒருவர் வவுனியாவில் பாடசாலை மாணவியிடம் பஸ்ஸில் தகாத முறையில் நடந்துகொண்ட இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ சிப்பாய் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய மாணவியை பஸ்ஸில் வைத்து அசௌகரியத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸார் கூறினர்.

செட்டிக்குளம் நோக்கி பஸ்ஸில் பயணித்த போதே மாணவி இச்சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

இதன்போது மாணவி கூச்சலிட்டதை அடுத்து இராணுவ சிப்பாய் தப்பியோட முயற்சித்துள்ளார்.

பஸ் சாரதியும் அதில் பயணித்த இளைஞர்களும் இராணுவ சிப்பாயைப் பிடித்து குருமன்காடு சந்தியிலுள்ள பொலிஸ் காவலரணில் ஒப்படைத்துள்ளனர்.

எனினும், சிறிது நேரத்தில் இராணுவ சிப்பாய் அங்கு இல்லை என தெரிவித்து பொலிஸாருடன் மக்கள் முறுகல்.

இதனைத் தொடர்ந்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு மக்கள் சென்றுள்ளனர்.

சந்தேகநபரான இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்ததை அடுத்து, பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குழுமிய மக்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.