
யாழ். எழுதுமட்டுவாழ் பகுதியில் முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எழுதுமட்டுவாழ் பகுதியில் நேற்று ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிளாலி பகுதியைச் சோ்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், குறித்த இருவரையும் நேற்று (வியாழக்கிழமை) சாவகச்சோி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே அவர்களை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.