உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனது சகோதரர் ரியாத் பதியுதீனை விடுவிக்க வேண்டும் என்று கோரி முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக ஆங்கில செய்தித்தாளொன்று இதனை தெரிவித்துள்ளது
எனினும் உயிர்த்த ஞாயிறன்று நடைபெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் மற்றும் மத்திய வங்கியின் பினை முறிவிற்பனை போன்ற விசாரணைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்று வருவதால் அதில் தலையிடமுடியாது என்று பசில் ராஜபக்ச கூறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ரியாத் பதியுதீன் உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரியுடன் தாக்குதலுக்கு முன்னர் தொலைபேசியில் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு வெகு நாட்களுக்கு முன்னர் இந்த தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றதா? அல்லது தாக்குதல் நடத்தப்படுவதற்கு முதல் நாள் அளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதா? என்பது தெரியவரவில்லை.
வணக்கம் இலண்டனுக்காக – ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்