செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வாகன விபத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர்.

வாகன விபத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர்.

1 minutes read

யக்கல – கிரிந்திவெல என்ற இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 43 மற்றும் 40 வயதுடைய தம்பதியினர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.கிரிந்திவெல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகே இந்த விபத்து நேற்று இரவு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், விபத்தில் காயமடைந்த வாகனத்தின் ஓட்டுநரும் உயிரிழந்தவர்களின் 2 மகள்களும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.கினிகம, யக்கலையைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பம் பதுளையில் நடந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டு பஸ்ஸில் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இவர்கள் தமது சொந்த இடத்தில் இறங்கியவுடன், உறவினர் ஒருவர் அவர்களை வீட்டில் இறக்கிவிட அழைத்துச் சென்றுள்ளார்.இதன்போதே குறித்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்து நடந்த நேரத்தில் உறவினர் மது போதையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தம்பதியரின் 20 மற்றும் 13 வயதுடைய இரண்டு மகள்கள், கம்பஹா மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் சென்ற குறித்த கார் இரு துண்டுகளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.