தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து தப்பி ஓடிய வயோதிப பெண்

தனிமைப்படுத்தலுக்கு இடையில் களுத்துறை – நாகொடை வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற 80 வயதான வயோதிப பெண்ணொருவர் கேகாலை பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.

அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொது சுகாதார பரிசோதகர்களின் தலையீட்டில் முல்லேரியா தேசிய மனநல நிறுவகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த வயோதிப பெண்ணுடன் தொடர்பினை பேணியிருந்த கேகாலை விற்பனை நிலையம் ஒன்றின் 7 பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 4 பேருக்கும் பிரித்தானியா மற்றும் லெபனானில் இருந்து நாடு திரும்பிய தலா ஒவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 993 ஆக உயர்வடைந்துள்ளதுடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட்-19 தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 7 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 849 ஆக அதிகரித்துள்ளது.

ஆசிரியர்