செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்து கண்டு பிடிப்பு!

யாழ். செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்து கண்டு பிடிப்பு!

0 minutes read

யாழ்ப்பாணம் – செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்து உள்ளதாகத் தெரிவித்து அங்கு பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

நல்லூர் – செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானத்தில் பை ஒன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில் ஆபத்தான வெடிமருந்து காணப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த தகவலின் அடிப்படையில், இன்று (திங்கட்கிழமை) அதிகாலை குறித்த பகுதி சிறப்பு அதிரடிப்படையினரால் தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, குறித்த பையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.