செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ்ப்பாணம்- சென்னைக்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்!

யாழ்ப்பாணம்- சென்னைக்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்!

0 minutes read

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம்- சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க அரசாங்கம் தயாராகி வருகின்றது.

இதேவேளை இரத்மலானை- யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இடையே உள்நாட்டு விமான சேவையையும் விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களை சர்வதேச விமான நிலையங்களாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய அரசின் உதவியுடன் 300 மில்லியன் ரூபாய் செலவில், புனித மடு மாதா தேவாலயத்தில் யாத்திரிகர்களுக்கான 144 இடைத்தங்கல் வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை இந்திய உயர்ஸ்தானிகருடன் இணைந்து சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று (வியாழக்கிழமை) நாட்டி வைத்தார்.

குறித்த நிகழ்வில். கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.