செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள்!

யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள்!

0 minutes read

ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

கடந்த 2019ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் , நட்சத்திர விடுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 39 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 250 இற்கும் மேற்பட்டோரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. 500இற்கும் மேற்பட்டவர்கள் அவயவங்களை இழந்து குடும்பத்தை இழந்தனர்.

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக நாட்டின் பல பாகங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருவதுடன் , தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகளும் இடம்பெற்றன.

யாழ். மரியன்னை தேவாலயத்தில் காலை 8.45 மணி அளவில் தேவாலய மணி ஒலிக்கப்பட்டு , மௌன அஞ்சலிகள் செலுத்தப்பட்டு மெழுகுதிரி ஏற்றப்பட்டு சிறப்பு ஆராதனைகளும் இடம்பெற்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.