செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் மின்னல் தாக்கி 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

யாழில் மின்னல் தாக்கி 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

0 minutes read

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் வயலில் உழுது கொண்டிருந்தவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இந்தச் சம்பவம் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றது.

இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை (டிப்போ) சாலையில் பேருந்து சாரதியாக பணியாற்றும் உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மதனராசா (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வயலில் உழவில் ஈடுபட்டபோது சம்பவம் இடம்பெற்றதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.