படுகொலையில் இருந்து இலங்கையரை காப்பாற்ற முயற்சித்த நபருக்கு விருது!

சியால்கோட் தொழிற்சாலையில் உள்ள கும்பலிடம் இருந்து இலங்கைப் பிரஜையைக் காப்பாற்றுவதற்கு தயாரிப்பு முகாமையாளர் என அடையாளம் காணப்பட்ட நபரொருவர் தீவிர முயற்சிகளை மேற்கொள்வதை CCTV காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த நபரின் மனிதாபிமான செயலை பாராட்டி ‘தம்ஹா ஐ சுஜாத்’ என்ற அதியுயர் விருதினை வழங்கவுள்ளதாக பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “மத அடிப்படைவாதிகளினால் பிரியந்த குமார தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரை காப்பாற்றுவதற்கு மலிக் அதான் மாத்திரம் போராடியிருந்தார்.

அவரது மனிதாபிமான செயலானது முழு பாகிஸ்தானுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தியுள்ளது“ என பதிவிட்டுள்ளார்.

ஆசிரியர்