புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு!

விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு!

0 minutes read

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு, விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில் இன்று (திங்கட்கிழமை) காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு.

சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான கே.பாஸ்கரன் (வயது 33) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த நபர் தனது வீட்டில் இருந்து நேற்று விடத்தல் தீவு கிராமத்திற்குச் சென்று விட்டு மீண்டும் தனது வீடு நோக்கி மோட்டார்சைக்கிளில் பயணித்துள்ளார்.

இந்த நிலையிலே அவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருவதுடன், சடலத்திற்கு அருகிலிருந்து அவர் பயணித்த மோட்டார்சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்தலத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.