செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அனைத்து அரசியல்வாதிகளும் கணக்காய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும்

அனைத்து அரசியல்வாதிகளும் கணக்காய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும்

0 minutes read

96.2% இலங்கையர்கள் அனைத்து அரசியல்வாதிகளும் கணக்காய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்களது கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் அனைத்தும் அரசால் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றும் விரும்புவதாக சமீபத்திய கருத்துக்கணிப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் இந்த கருத்துக்கணிப்பின்படி, பத்தில் ஒன்பது இலங்கையர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். ராஜபக்ஸ குடும்பம் இலங்கை அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர்.  87% பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவளித்துள்ளனர்.

ஏறக்குறைய 75% பேர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். மேலும் நாட்டில் பாதிக்கும் மேற்பட்டோர், அதாவது 55% பேர் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் இராஜினாமா செய்ய வேண்டும் என விரும்புகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.