செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இந்திய ஸ்டேட் வங்கி கடனுதவித் திட்டம்

இந்திய ஸ்டேட் வங்கி கடனுதவித் திட்டம்

0 minutes read

இலங்கையின் உணவு, சுகாதாரம் மற்றும் வலு சக்திப் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் 2022 மார்ச் 17ஆம் திகதி இந்திய ஸ்டேட் வங்கி (SBI) ஊடாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடனை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.

இந்த கடனுதவித் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதுடன் அரிசி, செத்தல் மிளகாய் போன்ற உணவுப்பொருட்கள் இத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இலங்கை மக்களினதும் அரசாங்கத்தினதும் முன்னுரிமை அடிப்படையில் சீனி, பால்மா, கோதுமை, மருந்து, எரிபொருள் மற்றும் உற்பத்தித்துறை சார்ந்த மூலப்பொருட்கள் ஆகியவையும் இக்கடனுதவித் திட்டத்தின்கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன.

இக்கடனுதவித் திட்டத்தின் நடைமுறைகள் தொடர்பாக இந்திய ஸ்டேட் வங்கியால் வெளியிடப்பட்டிருக்கும் மேலதிக விபரங்களை பின்வரும் இணைப்பின் ஊடாக அறியலாம் என, இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.