பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
கடந்த 09 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு அருகில் இடம்பெற்ற அமைதிப்போராட்டங்களில் குண்டர்களால் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலேயே பாராளுமன்ற உறுப்பினரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று மாலை 04 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றார்.
