செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கைக்கான ரஷ்யாவின் 100,000 மெ. தொ. கச்சா எண்ணெய்

இலங்கைக்கான ரஷ்யாவின் 100,000 மெ. தொ. கச்சா எண்ணெய்

0 minutes read

100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் கொண்ட சரக்குக் கப்பலொன்று இன்று இரவு கொழும்பை வந்தடையவுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பலில் இருந்து நாளையதினம் (14) தர பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, 120,000 மெட்ரிக் தொ கொண்ட 2ஆவது கச்சா எண்ணெய் சரக்கு கப்பலொன்று, எதிர்வரும் ஓகஸ்ட் 23 – 29ஆம் திகதிகளுக்கிடையில் வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இரண்டு எரிபொருள் கப்பல்களும் (Russian Ural Crude Oil) ரஷ்ய கப்பல்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நடவடிக்கைகள் எதிர்வரும் வாரத்தின் நடுப்பகுதியில் செயல்படவுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.