’எவரையும் கைவிடாதீர்கள்’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத்திட்டத்துக்கு இன்று (12) வரை 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அவற்றுள் 624,714 விண்ணப்பங்கள் இன்று (12) வரை தரவுக் கட்டமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள 341 பிரதேச செயலகங்களில் நிறுவப்பட்டுள்ள நலன்புரி உதவித் தகவல் அலகுகள் மூலம் அனைத்து விண்ணப்பங்களும் உடனடியாக இத்தரவுக் கட்டமைப்பில் உள்வாங்கப்படும்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான முன்னோடி திட்டம் அண்மையில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பிரதேச செயலகங்களை மையமாகக் கொண்டு இடம்பெற்றதுடன், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.