December 2, 2023 7:10 pm

யாழ். இந்து, பொஸ்கோவில் 323 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணத்தில் இரண்டு முன்னணிப் பாடசாலைகளில் 323 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

அந்தவகையில், யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையில் 161 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.

யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையில் இருந்து இம்முறை 266 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் 161 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைப் பெற்று சித்தி பெற்றுள்ளனர்.

அதேவேளை, யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் 162 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைப் பெற்று சித்தி பெற்றுள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்