புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு அமோக வரவேற்பு!

கிளிநொச்சியில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு அமோக வரவேற்பு!

0 minutes read
வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு சார்பில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் கிளிநொச்சி மாவட்டத்துக்கான தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை இன்று ஆரம்பித்தார்.

இன்று பளை நகருக்கு வருகை தந்த அரியநேத்திரன், தமிழ்ப் பாரம்பரிய பறை மற்றும் மங்கள வாத்திய இசையோடு வரவேற்கப்பட்டார்.

பெருந்திரளான மக்கள் கூடி நின்று அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து பளை பஸ் நிலையத்தில் பிரச்சார நடவடிக்கையை அரியநேத்திரன் ஆரம்பித்தார்.

அங்கிருந்து இயக்கச்சி, ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சி நகர் சென்று இரணைமடுச் சந்தியில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

பளையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் தமிழ்ப் பொது வேட்பாளருடன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.