செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா 11600 வருடங்களுக்கு பின் இதனை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும்

11600 வருடங்களுக்கு பின் இதனை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும்

0 minutes read

11ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரிய மண்டலத்தில் நுழையும் பச்சை நிற வால் நட்சத்திரமான ஸ்வான் தற்போது பூமிக்கு அருகில் கடந்து செல்கிறது.இதனை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் வால் சுமார் ஒரு கோடியே 77 லட்சம் கிலோ மீட்டர்கள் நீளம் கொண்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பனி மற்றும் தூசுக்களால் ஆன இந்த வால் நட்சத்திரம் ஆஸ்திரேலியாவின் தெற்கிலிருந்து வடக்காகச் செல்வதாக வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

சூரியனை நோக்கிய வழியில் வெப்பமடையும் போது, அது சூரிய ஒளியைப் பிரதிபலிக்கிறது என்று கூறிய ஆய்வாளர்கள், இந்த வால் நட்சத்திரத்தை 5 முதல் 6 நாட்கள் வரை வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.