செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்க – சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

அமெரிக்க – சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

1 minutes read

அமெரிக்க வான் பரப்பில் சீன உளவு பலூன் பறந்த விவகாரம் நிலுவையில் உள்ள நிலையில், அமெரிக்க மற்றும் சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்துக்கொண்டுள்ளனர்.

ஜெர்மன், முனீச் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கிலே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீய் (Wang Yi) ஆகியோர் சந்தித்துள்ளனர்.

இதன்போது, சீன பலூன் விவகாரம் மீண்டும் இடம்பெறக்கூடாது என்றும் அமெரிக்காவின் அரசு உரிமையை மீறும் எந்த நடவடிக்கையையும் வாஷிங்டன் பொறுத்துக்கொள்ளாது என்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், சீனாவுடன் பூசலை அமெரிக்கா நாடவில்லை என்றும் பிளிங்கன் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், வழி தவறிச் சென்ற வானிலை ஆய்வகப் பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியமை அனைத்துலக வழக்கங்களை மீறிய நடவடிக்கை என்று சீன வெளியுறவு அமைச்சர் சாடியுள்ளார்.

படம் : AFP

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.