செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

0 minutes read

இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வாரம் சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 29ஆம் திகதி ஒரு வாரத்திற்கு யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டது.

எனினும், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய சிறப்பு விடுமுறை நாளை தொடக்கம் மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்படுவதாக இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த கல்வி வலயப் பாடசாலைகள் வரும் ஏப்ரல் 19ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பிக்கும்போதே திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.