செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பொலிவூட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் பிணையில் விடுதலை

பொலிவூட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் பிணையில் விடுதலை

1 minutes read

ஆபாசப் படங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் கைதான பொலிவூட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா 2 மாதங்களுக்கு பிறகு பிணையில் விடுதலையாகியுள்ளாார்.

ஆபாச படம் எடுத்து அதை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்ததாக கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி ராஜ்குந்த்ராவை மும்பை பொலிஸார் கைது செய்தனர்.

அவரது நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு அதிகாரி ரியான் தோர்பேயும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் துணை குற்றப்பத்திரிகையை பொலிஸார் கடந்த சில நாட்களுக்கு முன் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில் தொழில் அதிபர் ராஜ்குந்த்ரா மற்றும் ரியான் தோர்பே பிணை கேட்டு மும்பை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்து இருந்தனர். அந்த மனுவில், ராஜ்குந்த்ரா மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பொலிஸார் ஒரு ஆதாரங்களை கூட குற்றப்பத்திரிகையில் கூறவில்லை. இதேபோல வழக்கில் ராஜ்குந்த்ரா பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது

இந்தநிலையில் நேற்று ஆபாச படவழக்கில் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் ராஜ்குந்த்ராவுக்கு பிணை வழங்கியது. அவரது கூட்டாளி ரியான் தோர்பேவுக்கும் பிணை கிடைத்து உள்ளது.

ஆபாச பட வழக்கில் கைதாகி 2 மாதங்களுக்கு பிறகு ராஜ்குந்த்ரா, அவரது கூட்டாளிக்கு பிணை கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.