திருகோணமலை நகரசபை மண்டபத்தில் 16.10.2022 அன்று வெளியீடு செய்யப்பட்ட டாக்டர் த . ஜீவராஜ் எழுதிய தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு என்ற வரலாற்று ஆய்வு நூலின் வெளியீட்டு விழா புகைப்படங்கள் இவை.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜே. ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களும், சிறப்பு விருந்தினராக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி. பிரேமானந் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வெளியீட்டு உரையினை கலாபூசணம் வே. தங்கராசா அவர்களும், அறிமுக உரையினை கலாநிதி இ. ஸ்ரீஞானேஸ்வரன் அவர்களும், நூல் தொடர்பான கருத்துரையினை திரு சற்குணம் சத்யதேவன் அவர்களும் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வினை கவிஞர் தில்லைநாதன் பவித்திரன் அவர்கள் தொகுத்து வழங்க குறுகிய கால அழைப்பில் வரலாற்று ஆர்வலர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
நன்றி – டாக்டர் ஜீவராஜ்



















