செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் தொற்றுநோயுடன் சிக்கிய விலைமாதுக்கள்!

வவுனியாவில் தொற்றுநோயுடன் சிக்கிய விலைமாதுக்கள்!

0 minutes read

வவுனியாவில் கைது செய்யப்பட்ட விபச்சாரிகள் 7 பேருக்கு தொற்றுநோய் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தம்மை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

விபச்சாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஏழு விலைமாதுக்கள் அண்மையில் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், அவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்தநிலையிலேயே இவர்கள் அனைவரும் பாலியல் தொற்றுநோய்களுக்கு ஆட்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாலியல் தொற்றுநோய்களான கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் தொற்றுக்களுக்கு அவர்கள் ஆட்பட்டுள்ளனர். எனவே, அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் உடனடியாக வவுனியா மருத்துவமனையில் எச்.ஐ.வி. தடுப்புப் பிரிவுக்குச் சென்று தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.