இங்கிலாந்தின் இலண்டன் நகரில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு பயணிக்கவிருந்த British Airways விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக புறப்பட்ட விமானம், மீண்டும் இலண்டன் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் நேற்று (15) இடம்பெற்றுள்ளது.
British Airways Boeing 787-8 (reg: G-ZBJG) BA35 என்ற இந்த விமானம் 360 பயணிகளுடன் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் இலண்டனிலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இதனையடுத்து British Airways விமானத்தின் இலண்டன் – சென்னை விமான சேவை மற்றும் சென்னை – இலண்டன் விமான சேவை ஆகிய இரண்டும் இரத்துச் செய்யப்பட்டன.
இதனால் இரு வழிப்பாதையிலும் சுமார் 700க்கும் பயணிகள் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
மூலம் : https://x.com/OsintUpdates/status/1934295789255225514
