செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா 40 ஆண்டுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற மற்றுமொரு இந்திய வீரர்!

40 ஆண்டுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற மற்றுமொரு இந்திய வீரர்!

1 minutes read

40 ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக விண்வெளிக்குச் சென்ற மற்றுமொரு இந்திய வீரர் எனும் பெருமையை சுபன்ஷு சுக்லா பெற்றுள்ளார்.

சுபன்ஷு சுக்லா, இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க ககன்யான் திட்டத்தில் பணியாற்றுபவர் ஆவார்.

அவருடன் சேர்த்து போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளின் வீரர்களும் விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து SpaceX Falcon 9 விண்கலன் பாய்ச்சப்பட்டது.

சுபன்ஷு சுக்லா செல்லும் இந்தத் திட்டத்திற்கு ‘Axion 4’ என்று பெயரிடப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் அங்குள்ள ஆய்வகத்தில் 14 நாட்கள் வரை தங்கி ஆய்வு செய்யவுள்ளனர்.

Axiom Space, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட விண்வெளி உள்கட்டமைப்பு நிறுவனம்.

இந்த நிறுவனம், அனைத்துலக விண்வெளி நிலையத்துக்குத் தனியார் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்கிறது.

40 ஆண்டுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற மற்றுமொரு இந்திய வீரர்!

1984ஆம் ஆண்டு, ராகேஷ் சர்மா சோவியத்தின் இன்டர்கோஸ்மோஸ் திட்டத்தின் மூலம் சல்யுட் 7 விண்வெளி நிலையத்திற்கு சென்றிருந்தார்.

அதன் பிறகு, விண்வெளி சென்றுள்ள இரண்டாவது இந்தியர் சுபன்ஷு சுக்லா ஆவார்.

உத்திரபிரதேசத்தில் பிறந்த இவர், நான்கு பேர் கொண்ட குழுவுடன் விண்வெளி பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

இந்தப் பயணம் அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை. மே 29 முதல் பல்வேறு ஒத்திவைப்புகளுக்கு பின் தான், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 ராக்கெட் நேற்று மாலை விண்ணில் பாய்ந்துள்ளது.

ஒத்திவைப்பு என்றால் இன்று கூட, சில தொழில்நுட்ப கோளாறினால், இந்த ராக்கெட் பயணம் ஒரு மணி நேரத்திற்கு பின் ஒத்திவைக்கப்பட்டது.

அது சரி செய்யப்பட்ட, ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு, ஃப்ளோரிடாவின், கென்னடி ஸ்பேஸ் சென்டரில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.