செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு

கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு

0 minutes read

இந்தியா – உத்தரப் பிரதேசம், கன்னோஜின் கோட்வாலி பொலிஸ் நிலையப் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் காயமடைந்தார் என்று உத்தரப் பிரதேச பொலிஸார் தெரிவித்தனர்.

சதர் கன்னோஜ் வட்ட அதிகாரி (CO)அபிஷேக் பிரதாப் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் நடந்தபோது வீடு புதுப்பிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

இறந்தவர்கள் ஷியாம்ஜீத் மற்றும் ஞானேந்திரா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்றாவது தொழிலாளி தில்லு காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன” என்று அவர் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.