செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொக்கிளாய் கடலில் தொழிலிற்கு சென்ற இளைஞன் மாயம் | தேடுதல் பணி தீவிரம்

கொக்கிளாய் கடலில் தொழிலிற்கு சென்ற இளைஞன் மாயம் | தேடுதல் பணி தீவிரம்

0 minutes read

கொக்கிளாய் கடலிற்கு தொழிலிற்கு சென்ற இளைஞன் கடலில் மாயமாகிய சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (25)  இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு கொக்கிளாய் கடலிற்கு நேற்றையதினம் அதிகாலை 4.30 மணியளவில் கடற்தொழிலுக்கு 5 பேர் சென்ற நிலையில் ஒருவர் மாயமாகியுள்ளார்.

தொழிலுக்கு போய் கடலில் இறங்கியவருக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் தற்போது வரை கிராம மக்கள் மற்றும் கடற்தொழிலாளர்கள் இணைந்து தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

குறித்த சம்பவத்தில் கொக்குளாய் முகத்துவாரம் பகுதியில் இருந்து தொழிலினை மேற்கொண்டுவரும்  23 வயதுடைய இளைஞனே மாயமாகியுள்ளார்

குறித்த இளைஞன் தொடர்பாக கொக்குளாய் பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் முறைப்பாடு பதிவு செய்தும் இதுவரை அவ் இடத்திற்கு பொலிஸார் வருகை தரவில்லை என்று காணாமல் போன இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் காணாமல் போன இளைஞனின் படம் வீட்டில் வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.